இந்தியா முழுவதும் வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வங்கி கடன்களில் வட்டி விகிதம் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நான்காவது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுக்கும். தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க கடன் பெறும் சூழலை ரிசர்வ் வங்கி தொடர்ந்து அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.