Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கை… காய்ச்சலுக்கு ஊசி போட்ட பெண் மரணம்… என்ன நடந்தது?…!!!

சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மதகுபட்டி அருகே உள்ள ஏரியூர் என்ற பகுதியில் முத்து பாண்டியன் மற்றும் செல்ல பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களாக செல்ல பிரியா காய்ச்சல் மற்றும் சளியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 6 மணி அளவில் மதகுபட்டி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்ல பிரியா சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், செல்ல பிரியாவுக்கு ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் செல்ல பிரியா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் செல்ல பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி செல்ல பிரியாவின் தாய் சின்னம்மாள் போலீசில் உடனடியாக புகார் அளித்தார்.

அந்த புகாரில், “தனது மகள் செல்ல பிரியா காய்ச்சல் காரணமாக மதகுபட்டி யில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த விட்டார். அதனால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |