சீரியல் நடிகை ஆலியா மானசா மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆலியா மானசா . இதன் பின் அதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . தற்போது இவர்களுக்கு அய்லா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு நடிகை ஆலியா மானசா ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் . இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகை ஆலியா மானசா அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் மாடர்ன் உடையில் ஆல்யா மானசா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது .