Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு பின்னாடி இருக்கு…. கரெக்டா கண்டுபிடித்த அதிகாரிகள்… இதை யாரு செஞ்சிருப்பா…?

கோவிலுக்கு பின்புறம் பதுக்கி வைத்திருந்த 8 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து விட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்ச மொழி பஞ்சாயத்து தலைவர் பிரவீன் குமார் மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு சாத்தான்குளத்தில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் தாசில்தாருக்கு  தகவல் தெரிவித்து விட்டனர். அந்த தகவலின் பேரில் தாசில்தார் லட்சுமி கணேஷ் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜஸ்டின் மேரி, முத்துராமலிங்கம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர் மஞ்சரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 மூட்டை ரேஷன் அரிசியை  கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்து விட்டனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசிகளை சாத்தான்குளம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளை அங்கு பதுக்கி வைத்திருந்தவர்கள் யார் என்ற விவரம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Categories

Tech |