Categories
உலக செய்திகள்

“திருமண வரவேற்பு” மணமகனுக்கு நடந்த அநீதி “நீங்க இல்லாத இந்த உலகத்தில்” மணமகளின் உருக்கமான பதிவு…!!

திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள வலாசோவோ என்ற கிராமத்தில் Radu Cordinianu என்பவருக்கும் Christina  என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது .இதைத்தொடர்ந்து புதுமண தம்பதிகள் வரவேற்பு நிகழ்ச்சியில்   நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகன் வீட்டாருக்கும் மணமகள்  வீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணப்பெண் உறவினர் Alexey D  மற்றும் Vladmir D   இருவரும் சேர்ந்து மணமகன் Radu  மற்றும் அவர் சகோதரர் Philip -ஐ  சுட்டுக்கொன்றனர்.

 

கண்முன்னே தனது கணவருக்கு நடந்த கொடுரத்தை பார்த்த    மனைவி Christina அதிர்ச்சி அடைந்தார்.  மேலும் இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில்  தன் கணவருக்காக மனைவி Christina சமூகவலைத்தளத்தில் உருக்கமாக வெளியிட்ட பதிவில்” என்னவரே , நீங்கள் இல்லாமல் நான் எவ்வாறு உயிர்வாழ போகிறேன்?  நான் சத்தியமாக உங்கள் மனைவியாக என்றும் இருப்பேன். உங்கள் கனவுகளை நான் நிறைவேற்றுவேன். இந்த கஷ்டத்திலிருந்து மீண்டு வர நான் முயல்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |