Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி – கமல், விஜய் – அஜித்… மிஞ்சிய சூர்யா… திரைத்துறையில் பெஸ்ட் & 1st….!!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி சங்க தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் திரைப்படத் துறையைச் சார்ந்த எல்லோருமே நிறைய உதவி செய்துள்ளார்கள்.

ஏறக்குறைய நான்கு கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி செய்துள்ளார்கள். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் குறைந்துள்ளதால் எங்களுக்கு நிதியுதவி அளித்த எல்லா உறுப்பினர்களையும், நடிகர் – நடிகைகள், தயாரிப்பாளர்கள் – இயக்குனர்கள், பிரபலங்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கின்றோம் என கூறி நிவாரண உதவி செய்த சில பட்டியலை வெளியிட்டார்.

அதில், 2டி என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் 10 லட்சம்,  ஏஜிஎஸ் பிரைவேட் லிமிடெட் 15 லட்சம், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருலட்சம்,  அனிருத் மியூசிக் டைரக்டர் 2 லட்சம்,  இயக்குனர் அட்லி 5 லட்சம், நடிகர் விஜய் 25 லட்சம், குஷ்பூ சுந்தர் 4 லட்சம்,  கேமராமேன் யூனியன் ஒரு லட்சம், நடிகர் தனுஷ் 15 லட்சம், ஈவிபி பிலிம் சிட்டி 2 லட்சம், காஜல் அகர்வால் 2 லட்சம், கமல் 10 லட்சம்,  கார்த்திக் சுப்புராஜ் 1 லட்சம், நடிகை நயன்தாரா 20 லட்சம், நடிகர் அஜித் 25 லட்சம்,

பசங்க பாண்டிராஜ் இயக்குனர் 2 லட்சம், ராகவா லாரன்ஸ் 50 லட்சம், ரஜினி 50 லட்சம், சத்யஜோதி கம்பெனி ஒரு லட்சம், இயக்குனர் சங்கர் 10 லட்சம், நடிகர் சிபிராஜ் ஒரு லட்சம்,  நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு லட்சம் , நடிகை தமன்னா 3 லட்சம் , நடிகர் உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம், நடிகர் விஜய் சேதுபதி 10 லட்சம் கொடுத்துள்ளார்கள் என என செல்வமணி தெரிவித்தார்.

மேலும், நாங்க கேட்ட உடனே சிவகுமார் சார் குடும்பத்திலிருந்து சிவகுமார், சூர்யா, கார்த்தி மூன்று பேரும் சேர்ந்து முதலில் ஒரு பத்து லட்சம் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு மூன்று மாதத்திற்கு முன்பு 80 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். மொத்தமாக 90 லட்சம் ரூபாயை அவர்கள் குடும்பத்தில் இருந்து கொடுத்துள்ளார்கள்.

Categories

Tech |