Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகைக்கு ஆண் குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து…!!!

பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் சின்னத்திரை தொடர்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் ஸ்வேதா வெங்கட் . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி , பொன்மகள்வந்தாள் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாமரை உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார் .

மேலும் இவர் கவண் , தப்பு தண்டா ஆகிய  திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை ஸ்வேதாவுக்கு திருமணம் நடைபெற்றது . திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் நடித்து வந்த ஸ்வேதா கடந்த ஆண்டு கர்ப்பமானார் . இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஸ்வேதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் . இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |