பெண் ஒருவர் தனது முடியை ஸ்டைல் செய்ய கொரில்லா ஸ்பிரே-வை பயன்படுத்தியதால் விபரீதம் நடந்துள்ளது.
செல்போனில் மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்று டிக் டாக். அதில் பலரும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்தான். ஆனால் சிலர் புது விதமான முயற்சிகளை செய்து வித்தியாசமான முறையில் வீடியோக்களை எடுத்து விடுவார்கள். அது காண்போரை வியக்கச் செய்யும். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள். அதன்படி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
பெண் ஒருவர் ஹேர் ஸ்பிரே தீர்ந்ததால் பொருட்களை ஒட்ட உதவும் கோரில்லா ஸ்பிரே-வை பயன்படுத்தியுள்ளார். ஹேர் ஸ்டைலிங் செய்ய ஆசைப்பட்ட பெண் விபரீத யோசனையால் தற்போது ஒரு மாத காலமாக தலைமுடி அப்படியே இருப்பதாக கவலை கொண்டுள்ளார். இதனை டிக்டாக்கில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.