Categories
மாநில செய்திகள்

நானும் ஒரு விவசாயி… இதுவே எனது முதல் கடமை… முதல்வரின் வியக்கத்தக்க ட்விட்டர் பதிவு…!!!

வேளாண் பெருங்குடி மக்களின் இன்னல்களை தீர்ப்பதே எனது முதல் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110கோடி பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். விவசாயிகள் புயல் காரணமாக படும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வந்தாலும், கூட்டுறவு வங்கிகளில் இருக்கக்கூடிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அனைவரும் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் விவசாயிகளின் நலனைக் கருதி பயிர் கடன் தள்ளுபடி செய்யப் படுவதாக முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அதிகமாக நேசிப்பவர் அதிகமாக உதவி செய்பவன்!. நானும் ஒரு விவசாயி. விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்!. வேளாண் பெருங்குடி மக்களின் இன்னல்களை தீர்ப்பதே எனது முதல் கடமை!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |