Categories
டெக்னாலஜி பல்சுவை

வெறும் ரூ.7 லட்சத்திற்கு… அதுவும் “எலக்ட்ரிக் கார்”… பிரபல நிறுவனம் அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, பொருளாதார சூழ்நிலை காரணமாக அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை தான் நாடி செல்கின்றனர். இதன்காரணமாக பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களை தயாரிப்பதை தடை செய்து வருகின்றது. இந்த வேளையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி வெறும் ஏழு லட்சத்திற்கு எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று நீண்ட கால திட்டமிட்டிருந்ததாகவும், அதன்படி தற்போது மாருதி சுசுகி நிறுவனம் வெற்றிகரமான பிராண்டின் கீழ் வேகன்ஆர் பிராண்டின் என்ற காரை புதிதாக அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் வெறும் 6 மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏற்றும் திறன் வாய்ந்ததாக உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரை செல்லும் சக்தி வாய்ந்த ஒன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |