உங்களுக்கு நீரழிவு பிரச்சனை இருந்தால் இந்த பழங்களை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மாம்பழம் ஆரஞ்சு பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, பி சி உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் உள்ளதால் இந்த பழங்களை உண்பது மூலம் பார்வைக் கோளாறு, மாலைக்கண் குணமாகின்றது.
பப்பாளி பழம் நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் கொய்யா மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு தாது பொருட்கள் உள்ளதால் இந்தக் கனிகள் நீரழிவு நோய்க்கு மிகவும் உகந்தது.
கொய்யாப்பழம் மலச்சிக்கலைப் போக்கி மூலநோயை குணப்படுத்தும். எலுமிச்சை அஜீரணத்தால் ஏற்படும் வாந்தி தாகத்தை தணிக்கும்.
இப்படி ஒவ்வொரு பழத்திலும் ஒரு அரிய குணம் உண்டு. நம் விருப்பத்திற்கேற்ப பழங்களை உண்ணும்போது தேவையான அளவில் உரிய சத்துக்கள் கிடைக்கும். பழங்களை உண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.