திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18ஆம் தேதி நடக்கிறது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகம், மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது.
இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுகலை பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளமோ, தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம், தனியார் துறை வேலை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யத் தேவையில்லை. முகாமில் பதிவு செய்ய கட்டணம் இல்லை. மாற்றுத்திறனாளிகள் தங்களது கல்வி சான்றுகள் மற்றும் சுய விவரங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.