ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஊரடங்கினால் சிகை அலங்காரம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
ஜெர்மனியில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் மக்கள் அத்தியாவசிய விஷயங்களுக்காகவும் தங்கள் வீடுகளில் இருந்து 9 மைல் தூரங்களை தாண்டி பயணிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கல், “இந்த ஊரடங்கினால் மற்ற மக்களைப் போன்று நானும் சிகை அலங்காரம் செய்ய வெளியில் செல்லாமல் இருந்தேன்.
இதனால் என் தலை முடியின் அலங்காரத்தை மாற்ற உதவியாளரிடம் கேட்டேன்” என்று கூறியுள்ளார். இந்த ஊரடங்கின் அனைத்து விதிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். இதனால் தலைமுடியின் நிறம் குறைந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும். இதுதான் தற்போதைய உண்மை நிலை என்று கூறிய அவர் சிகை அலங்காரம் செய்யும் கடைகள் இனிமேல் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.