நகைச்சுவை நடிகை வித்யூலேகா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா . இந்த படத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் . தற்போது தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார் . அப்பாவின் துணையால் சினிமாவிற்குள் நுழைந்தாலும் தன்னுடைய திறமையால் தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நாயகியாக உயர்ந்துள்ளார்.
இவரது உடல் எடையைப் பற்றி பலரும் கிண்டல் அடிப்பதாக பல பேட்டிகளில் இவர் தெரிவித்துள்ளார். தற்போது ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்திய வித்யூலேகா சுமார் 25 முதல் 30 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார் . இவர் குண்டாக இருக்கும் போதே மார்டன் உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ‘குண்டாக இருப்பவர்கள் மாடர்ன் உடை போட கூடாதா?’ என்று கேள்வி எழுப்பியவர். தற்போது தன்னை கிண்டல் செய்த அனைவரும் வியக்கும்படி உடல் எடையை குறைத்து வித்யூலேகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.