நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள குட்டி ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் வயது வந்தோர் மட்டும் பார்க்கும் வகையில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கியுள்ள” குட்டி ஸ்டோரி” ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் முழுக்க முழுக்க காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விஜய் சேதுபதி திருமணமாகி குழந்தைகளுடன் இருந்தாலும், அதிதி பாலனுடன் தொடர்பில் இருக்கிறார். அதனைப்போலவே அமலாபாலும் திருமணமான ஆணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை வயது வந்தோர்(18) மட்டும் தான் பார்க்க முடியும் என்று போல அனைத்து காட்சிகளும் அமைந்துள்ளன.
blob:https://www.youtube.com/5d095224-271e-4d48-a0a2-48931de27269