Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவில் யானைக்கும்…. கொரோனா பரிசோதனை…. என்ன ஆனது…??

நெல்லையப்பர் கோவில் யானை மற்றும் அதன் பாகனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் வருடந்தோறும் யானைகள் நலவாழ்வு முகாம் 48 நாட்களுக்கு அறநிலை துறை சார்பாக நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் இருந்து பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளும் பங்கேற்று யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் முறையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, சத்தான உணவு வழங்கல் .நடைபெறும் இந்த வருடத்திற்கான யானைகள் நலவாழ்வு முகாம் வரும் 8 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் கொரோனா காரணமாக முகாமில் பங்கேற்கும் யானைகள் மற்றும் பாகங்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில் யானை காந்திமதியும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டது. அதற்கு முன்னதாக இன்று காலை காந்திமதி யானைக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து யானைப்பாகன் ராமதாஸ் விஜயகுமார் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து காந்திமதி யானை முகாமுக்கு செல்லப்படும்.

Categories

Tech |