பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு சுவிட்ஸர்லாந்து அரசு தடைவிதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட கொரோனாவிற்கு எதிரான ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவீடன் மற்றும் போலந்து போன்ற நாடுகள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு செலுத்தப்படாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சுவிட்ஸர்லாந்து அரசும் ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி குறித்து கிடைத்திருக்கும் தகவல்களை அவற்றை அனுமதிக்கும் அளவிற்கு தகுதியுடையவையாக இல்லை என்று அனுமதிக்க மறுத்துள்ளது.
மேலும் சுவிட்ஸர்லாந்து, வட மற்றும் தென் அமெரிக்காவில் ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் அவற்றிற்கான முடிவுகள் வெளிவருவதாக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளது. மேலும் முடிவுகள் வெளியான பிறகு உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுவிட்சர்லந்து தெரிவித்துள்ளது.