பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்த பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்களின் வீட்டுக்கு வழங்க தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்களின் வீட்டிற்கே வழங்க தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அரை கிலோ பஞ்சாமிர்தம், விபூதி, சாமி படத்துடன் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். அஞ்சலகம் மூலம் 250 ரூபாய் கட்டணம் செலுத்தினால் பக்தர்கள் இல்லத்திற்கே பிரசாதம் சென்றடையும். அதனால் பழனி பிரசாதம் வாங்க விரும்பும் பக்தர்கள் அனைவரும் உடனே ஆர்டர் பண்ணுங்க.