தண்ணீர் என்று நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தேவேந்திரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு தேவயானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வயலுக்கு சென்ற தேவயானி அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சிமருந்தை தவறுதலாக தண்ணீர் என்று நினைத்து குடித்து விட்டார்.
இதனையடுத்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தேவயானி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.