Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுல மருத்துவ குணம் இருக்கு… 2 கோடிக்கு மண்ணுளி பாம்பு விற்பனை… வசமாக சிக்கிய மோசடி கும்பல்…!!

2 கோடிக்கு மண்ணுளிப் பாம்பை மூன்று பேர் சேர்ந்து விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் வனச்சரக அலுவலகத்திற்கு பெரிய குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளூர் வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வரும் உதயகுமார், செங்குன்றம் லட்சுமிபுரம் பெருமாள் கோவிலில் வசித்து வரும் பொன்னையன் மற்றும் ஈக்காடு கல்யாணம் குப்பத்தில் வசித்து வரும் தங்கமணி போன்றோரை சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பு விற்க முயன்ற குற்றத்திற்காக போலீசார் கைது செய்துவிட்டனர்.

அவர்கள் ஆளுயர அளவும், 4 1/2 கிலோ எடையும் உள்ள ஒரு மண்ணுளிப் பாம்பை ரூபாய் 2 கோடி பேரம் பேசி விற்பனை செய்ய முயற்சி செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வனச்சரகர் கூறும்போது, மண்ணுளி பாம்பில் மருத்துவ குணம் இருப்பதாக தவறான தகவலை பரப்பி அதன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |