பேராவூரணி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட தாய் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு கிராமத்தை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மனைவி புவனா. இவர்களுக்கு அக்ஷயா, ஹேமாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக புவனா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மதிவாணன் கோவையில் பார்த்து வந்த தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளை பராமரித்து வந்தார்.
இந்நிலையில் கட்டயங்காடு கிராமத்தில் புதிதாக துவங்கப்பட்ட கொள்முதல் நிலையத்திற்கு மதிவாணன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த புவனா தென்னை மரத்து வண்டுகளை அழிக்க பயன்படுத்தும் செல்பாஸ் மாத்திரைகளை வாங்கி தண்ணீரில் கரைத்து வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும் என கூறி இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இரவு மதிவாணன் வந்து பார்க்கும்போது மூவரும் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்தனர் .
பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே புவனாவும், அக்ஷராவும் இறந்துவிட்டனர். ஹேமாஸ்ரீ ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும் குழந்தையும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.