Categories
தேசிய செய்திகள்

போலீஸ் கமிஷனர் மாதிரி… “போலி வாட்ஸ் அப் உருவாக்கி மிரட்டல்”… போலீஸ் எச்சரிக்கை..!!

திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் அழைப்பதாகக் கூறி பலரது செல்போன்களுக்கு, நீங்கள் தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள். உங்களை அரசு கண்காணிக்கிறது எனக்கூறி அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அந்த நம்பரை ட்ரூகாலர் மூலம் பரிசோதித்துப் பார்த்தால் சிட்டி கமிஷனர் என வந்துள்ளது. மேலும் அந்த வாட்ஸ்அப்பில் கமிஷனர் லோகோவும் இருந்துள்ளது.

இதனால் பலர் உண்மையென நம்பி விட்டனர். அதிலும் ஒரு சிலர் சைபர் கிரைம் போலீசுக்கு புகார் தெரிவித்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் வாட்ஸ்அப் மற்றும் போன் நம்பர் போலி எனத் தெரியவந்தது. விசாரணையில் விழிஞ்ஞம் வெங்கனூர் பகுதியைச் சேர்ந்த அமல்ஜித் என்ற வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |