சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.இ .அ.தி.மு.க கிளை கழக செயலாளர் திரு.குமாரும், அவரது மனைவி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரான திருமதி வசந்தகுமாரும் சசிகலாவை வரவேற்று அப்பகுதியில் சுவரொட்டிகள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த முள்ளங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு நாராயணனும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டியிருந்தர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் அ.தி.மு.க வை சேர்ந்த பேரூர் கழக சேர்ந்த எம்.பி விஜயன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவே கழகத்தை வழிநடத்தி வருக என மீன்சூர் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளார்.
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி பகுதியில் அ.இ.அ.தி.மு.க முன்னாள் நகர செயலாளரும், கூட்டுறவு வங்கியின் இயக்குனருமான திரு சிங்காரம் சசிகலாவை வரவேற்கும் வகையில் சோதனைகளை வென்று, சாதனை படைக்க தமிழகம் வருகை தரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் தியாக தலைவி சின்னம்மா வணங்கி வரவேற்கிறோம் என ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் சேத்தியை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க வின் தொண்டர்கள் அப்பகுதி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். தாய் தந்த வரமே அ.இ.அ.தி.மு.கவின் நிரந்தர பொதுச்செயலாளர்கள் அவர்களை வருக வருக நெஞ்சம் நிமிர் கழகம் காக்க வாருங்கள் தாயே என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய அ.இ.அ.தி.மு.க அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு ஆர் வேல்முருகன் அப்பகுதி முழுவதும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளர். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் அ.இ.அ.தி.மு.கவை வழிநடத்த வருகைதரும் பொதுச் செயலாளர் சின்னம்மா அவர்களை வருக வருக என சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
வேலூர் காட்பாடி தொகுதியில் அ.இ.அ.தி.மு.க ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு.சி.சரத்குமார் சசிகலாவை வரவேற்று அப்பகுதி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, வாழ்த்தி சுவரொட்டி ஓட்டிவருபவர்கள் மீது அதிமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்தாலும், அடிமட்ட தொண்டர்கள் பலரும் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி வால்போஸ்டர் ஓட்டி வருவது அதிமுகவில் உள்ள பிரிவை காட்டி வருகின்றது.
அதிமுகவின் தலைமைக்கு இது கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எவ்வித பதட்டமும் இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்கள் என தலைமை நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.