Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புற்றுநோய் மண்டல மையம்… தலைமை தாங்கிய ஆட்சியர்…. காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்..!!

புற்றுநோய் மண்டல மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஹைகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரியில் ரூபாய் 34 கோடியில் புற்றுநோய் மண்டல மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் மண்டல மையத்தை நேற்று முன்தினம் காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் இருந்த இரண்டு பேர் மீண்டது எப்படி ? என்பது பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.

இந்த திறப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கியுள்ளார். மேலும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், புற்றுநோய் பிரிவு தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |