Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா பொருட்கள் மீதான வரி” குறைக்க கோரி டிரம்ப் கோரிக்கை…!!

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள அதிக வரியை திரும்ப பெற வேண்டுமென்று அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுநாள்  ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி இன்று அதிகாலை  ஒசாகா நகரம் சென்றடைந்தார்.

மேலும் இதில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மோடியை சந்திக்க இருப்பதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர் பதிவிட்ட ட்வீட்_தில் கடந்த சில ஆண்டுகளில்  அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்துள்ளது.  அண்மையில் மீண்டும் அதிக வரி விதிக்கப்பட்டது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது.எனவே அமெரிக்க  பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிக  வரி விதிப்பை இந்தியா கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |