சாலையில் வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் தலையை கொடுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கோயம்பேடு 100 அடி சாலையில் நடந்து சென்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, நடந்தது விபத்து அல்ல என்றும், ஓடும் லாரி முன் பாய்ந்து அந்த நபர் தற்கொலை செய்து கொண்டதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பேருந்துகள், லாரிகள், கார்கள் என அனைத்து வாகனங்களும் கோயம்பேடு 100 அடி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த அந்த நபர் அங்கு வந்த வாகனங்களை கவனித்துள்ளார்.
அதன் பிறகு ஒரு லாரி வருவதை பார்த்த அவர் திடீரென லாரியின் முன்பக்க சக்கரத்தில் முன்பு சாலையில் படுத்து கொண்டார். இதனால் லாரியின் அனைத்து சக்கரங்களும் அவர் மீது ஏறியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த காட்சிளை அந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அந்த நபர் விபரம் குறித்தும், எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.