என்எல்சி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் வேலை வாய்ப்பை மத்திய அரசு திட்டமிட்டு பறிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பட்டதாரிகள் சிலர் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அவர்கள் பல்வேறு துறைகளில் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மத்தியில் தமிழகத்தில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயை தொடர்ந்து என்எல்சி நிறுவனத்திலும் தமிழகத்தை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பை மத்திய அரசு திட்டமிட்டு பறிக்கும் வகையில் தேர்வு நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
என்எல்சி 259 GET தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 99% வெளிமாநிலத்தவர். திட்டமிட்டு தமிழர்களின் வேலைவாய்ப்பை மத்திய அரசு பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தமிழகத்தில் என்எல்சி தேர்வு எழுதியவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.