சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்த இரண்டரை கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விட்டனர்.
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த மூன்று பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தப் பார்சல்களின் மேல் புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த பார்சலில் 2 1/2 கோடி மதிப்புள்ள 27 கிலோ போதை மாத்திரை பவுடர் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் உள்ள முகவரியை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சென்னைக்கு கவுகாத்தியில் இருந்து வந்த விமானத்தை தொழிலாளர்கள் சுத்தம் செய்யும்போது கழிவறையில் 1 கிலோ 200 கிராம் கடத்தல் தங்கம் இருந்ததை பார்த்துள்ளனர். அதன்பின் ரூபாய் 65 லட்சம் மதிப்புள்ள அந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி அதனை கடத்தியவர்கள் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.