14-வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14-வது ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியியும் சில வீரர்களை விதித்திருந்தனர். இதுகுறித்த அறிவிப்பை ஐபிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆழமாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்று அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளது. இதில் மொத்தம் 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் இடம் சென்னையில் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் இந்த ஏலத்திற்கு 814 இந்திய வீரர்கள், 283 வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ்லிருந்து 56 வீரர்களும், குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் இருந்து ஒரு வீரரும் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 61 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள். அவர்களில் 22 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம்.