கோவையில் காட்டு பன்றி ஒன்று அவுட் காயை கொண்டு யாரோ தாக்கியதில் வாயில் அடிபட்டு உயிருக்கு போராடி வருகின்றது.
கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் நரசிபுரா கிராமம் வேளாண்மை கூட்டுறவு பக்கத்தில் காட்டு பன்றி ஒன்று வாயில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சென்று பார்வையிட்டபோது காட்டு பன்றியின் வாயில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளது.
இதையடுத்து வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு காட்டு பன்றியை கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்கள் யாரும் பன்றியை வேட்டையாட நோக்கத்தோடு அவுட் காய் பயன்படுத்தி தாக்கினார்களா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.