சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இவர் காலை நேரத்தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள ஒரு காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அந்த சமயம் அங்குள்ள புதரில் மறைந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சிறுமியை திடீரென வழிமறித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட முயற்சிக்கும் போது, அந்த நபர் சிறுமியின் வாயை பொத்தி புதருக்குள் தூக்கிச் சென்று விட்டார். அந்த சிறுமிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு சிறுமி முன்னால் சென்ற அவரை காணாததால் அங்கு தேடி பார்த்துள்ளார். அப்போது சிறுமியை அந்த வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்றதை பார்த்த மற்றொரு சிறுமி அலறி சத்தம் போட்டுள்ளார்.
அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் வருவதை பார்த்த அந்த வாலிபர் சிறுமியை விட்டு விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் பொதுமக்கள் விரட்டி சென்று அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்துவிட்டார். இதுகுறித்து ஊர்மக்கள் பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு மயக்கம் தெளிந்த பின்னர் தான் அவரின் விவரம் குறித்து தெரியவரும் என்று கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.