முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் செல்வராஜ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் டாக்டர் குருநாத் முன்னிலை வகித்து உள்ளார். இந்த போராட்டத்தில் முன்னாள் தலைவர் டாக்டர் விஜயகுமார், தேசிய இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஜெயலால், மாநில செயலாளர் டாக்டர் ரவிகுமார், மாநில தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், மாநில தலைவர்கள் டாக்டர்கள் ராஜா, தியாகராஜன், ஸ்ரீதர் பிரகாசம் மற்றும் அபிஹாசன் போன்ற பலர் கலந்துகொண்டு இந்த போராட்டத்தில் பேசியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் மத்திய அரசு நிடி ஆயோக் அமைப்பு மூலம் நான்கு குழுக்களை அமைத்து மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி, பொது சுகாதாரம மற்றும் மருத்துவக்கல்லூரி என அனைத்தையும் ஒரே கலவைகுள் கொண்டு வர முயற்சி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் இது நாட்டின் சுகாதார துறையை மிகவும் பாதிப்புக்குள்ளாகும். எனவே இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நிடி ஆயோக் அமைப்பை கலைக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.