Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன செஞ்சும் தடுக்க முடியல… இனிமேல் இப்படிதான் பண்ணனும்… அதிகாரிகளின் ஆலோசனை…!!

அதிகாரிகள் திண்டிவனத்தில் அடிக்கடி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் நகரை சுற்றி தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் தினமும் ஏராளமான விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனாலும் அவர்களால் விபத்தை தடுக்க முடியவில்லை. மேலும் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். அதோடு திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்டூரிலிருந்து ஓங்கூர் சுங்கசாவடி வரை உள்ள முக்கிய சந்திப்புகளில் விபத்தை தடுப்பதற்காக பேரி கார்டுகளை வைத்துள்ளனர்.

இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தொடர் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். அந்த உத்தரவின்படி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், திண்டிவனம் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையர் மேலாளர் தீனதயாளன், நெடுஞ்சாலை உதவி பொறியாளர் குரு ஆகியோர் திண்டிவனம் அடிக்கடி விபத்து ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் அங்கு அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக எந்த வகையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அனைவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Categories

Tech |