Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எனக்கு இப்போ உண்மையான காரணம் தெரியனும்… அதுவரைக்கும் விட மாட்டேன்… ஊசி போட்டதுக்கு அப்புறம் தான் இப்படி ஆச்சு…கணவனை இழந்த மனைவியின் போராட்டம்…!!

பெண் தனது குழந்தைகளுடன் கணவனின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துப்புரவு பணியாளராக புதூர் பேரூராட்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு பேருந்தில் அருப்புக்கோட்டைக்கு மனோகரன் வந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து உடனடியாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மனோகரனின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் 5 வது நாளாக கணவரின் உடலை வாங்க மறுத்து அவரது மனைவி அம்பிகா தனது குழந்தைகளுடன் மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதுகுறித்து அம்பிகா  கூறும்போது, சில நாட்களுக்கு முன்பு மனோகரன் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்புதான் அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார், எனவே தனது கணவரின் இறப்பிற்கான உரிய காரணத்தை அறியும் வரை உடலை வாங்க முடியாது என கூறியுள்ளார்.

Categories

Tech |