பிப்ரவரி 10 ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கும், மார்ச் 1ம் தேதி முதல் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதாக என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு எட்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கு அடுத்தகட்டமாக ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்று தெரிகிறது. ஆனால் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று சந்தேகமே.