Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு திறனை உருவாகும் முயற்சி… மும்முரமாக நடக்கும் பணி…. அதிகாரிகளுக்கு போடப்பட்ட தடுப்பூசி…!!

தென்காசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் இரு முறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன் களத்தில் நின்று வேலை செய்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 971 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தென்காசி அரசு மருத்துவமனையில் அரசு அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடும் பணியானது துவங்கிவிட்டது. இதில் முதலாவதாக மாவட்ட கலெக்டரான சமீரன் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பு போலீஸ் சூப்பிரண்டு சுகுணா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன்பின் அரசு அலுவலர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அப்போது மாவட்ட பூச்சியியலாளர்  தயாளன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜஸ்லின் மற்றும் பிற டாக்டர்கள் அவர்கள் உடன் இருந்தனர்.

Categories

Tech |