Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை ஏன் குடிச்சீங்க… இப்படி அவஸ்தை படனுமா… கைது செய்த காவல்துறை…!!

கள்ளச்சாராயம் குடித்து மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தி அகரம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கருமந்துறை மலை கிராமத்தில் வசித்துவரும் வெள்ளையன் என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோட்டத்திற்கு சென்று சாராயம் பிடித்துள்ளார். இதனை அடுத்து சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் மதுவிலக்கு போலீசார் அந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாளடிபட்டு பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரிடம் பெரியசாமி சாராயம் வாங்கிக் குடித்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து குமாரை கைது செய்த போலீசார் லாரி டயரில் அடைத்து வைத்திருந்த 50 லிட்டர் சாராயம்,  60 பாக்கெட் சாராயம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்து விட்டனர்.

Categories

Tech |