Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவன் சொன்னதெல்லாம் நம்பி ஏமாந்துட்டேன்…. 26 லட்சம் ரூபாயை மோசடி செய்த நிறுவனம்… போலீசாரின் தேடுதல் வேட்டை…!!

நிதி நிறுவனம் நடத்தி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகார் மனுவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் அளித்துள்ளார். அந்த புகாரில் கன்னங்குறிச்சி பகுதியில் ஜெயராமன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரு மடங்கு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை நம்பிய சுரேஷ் அந்த நிதி நிறுவனத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 26 லட்சம் ரூபாயை முதலீடு செய்ததாகவும், நிறுவனம் கூறியபடி இரு மடங்கு பணத்தை அவர்கள் திரும்ப தரவில்லை எனவும் புகார் அளித்துள்ளார்.

அந்த நிறுவனத்தில் இருந்து இதுவரை 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே தான் கட்டிய பணத்தை திரும்ப தரும்படி அந்த நிறுவனத்திடம் கேட்டபோது ஜெயக்குமார் சரியான பதில் கூறாமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் அவர் மோசடி செய்த 26 லட்சம் ரூபாயை மீட்டுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் சுரேஷ் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் செந்தில்குமார் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிந்து ஜெயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |