இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது . இதையடுத்து காஜல் தனது கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் நிற்கிறார்.
நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலையை பார்க்க சென்றிருந்தார். அப்போது கௌதம் நடுவில் நிற்க ஒரு பக்கம் காஜல் அகர்வால் மற்றொரு பக்கம் மெழுகு சிலையுடன் உள்ள காஜலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்து குழம்பிய ரசிகர்கள் யார் உண்மையான காஜல் அகர்வால் ? என்று கமெண்ட்ஸ் தெரிவித்ததோடு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .