Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! பள்ளிக்கு வரும்போது…. இது கட்டாயம் கொண்டு வரணும் – முக்கிய அறிவிப்பு…!!

9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் கூடிய கடிதத்தை கட்டாயம் பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படுள்ளது. மேலும் பிப்ரவரி-8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் கூடிய கடிதம் ஒன்றை தரவேண்டும். அதை மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் மற்ற வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Categories

Tech |