திருப்பதியில் ஆர்ஜித சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சாமி தரிசனத்துக்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கூட்டத்தில் மாதாந்திர செயல் அதிகாரி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கேசவ ரெட்டி, பக்தர்களிடம் இருந்து தொடர் கோரிக்கை வந்தவண்ணம் இருக்கின்றன.
இதை கருத்தில் கொண்டு ஆர்ஜித சேவை மீண்டும் தொடங்க திட்டம் உள்ளதாக கூறியுள்ளார். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாளில் ஏழு விதமான ஆடை அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தரும் மலையப்ப சுவாமிகளின் மணி பிரம்மோற்சவம் கொரோனா வழிகாட்டுதலின்படி மிக சிறப்பாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.
இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தொடங்கியது. ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னை, பெங்களூரு, காஞ்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 650 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான டிக்கெட்டுகளை www.apsrtconline.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.