நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘அயலான்’ படத்தின் அப்டேட்டை இயக்குனர் ரவிகுமார் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கருணாகரன் ,யோகிபாபு, பாலசரவணன் ,ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
https://twitter.com/Ravikumar_Dir/status/1357298113409523714
‘அயலான் ‘ சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர் . சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருவதாக இயக்குனர் ரவிக்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . மேலும் ‘அயலான்’ படத்தின் அப்டேட் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் .