அமெரிக்கா நாடு திருடு போன காரையும், கொள்ளையனையும் தேடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டிலுள்ள ப்ளோரிடா மாகாணத்தில் திருடுபோன காரை போலீஸ் அதிகாரிகள் நாடுமுழுவதும் தேடும் சம்பவம் வைரலாகி வருகிறது. திருடுபோன காரையும் திருடிய கொள்ளையனையும் பிடிக்கும் முயற்சியில் அமெரிக்க காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அந்த காருக்கு உள்ள முக்கியத்துவத்தை விட அந்த காரினுள் இருந்த பொருளுக்குள்ள முக்கியத்துவமே அதிகம் என கருதி போலீசார் இந்த தீவீர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடுபோன கார் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான கார் என்றும், அந்த காரினுள் 100,00 டாலர் மதிப்புள்ள 30கொரோனா தடுப்பூசி பண்டல்கள் இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு வந்த அந்த காரை ஒட்டுனர் பார்க்கிங் செய்வதற்காக இன்ஜினை அணைக்காமலே இடம் தேடியுள்ளார் . இதனை நோட்டமிட்டுருந்த மர்ம நபர் ஒருவர் காரை எடுத்துச் சென்றுவிட்டார்.
தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் அந்த காரில் உள்ள கொரோனா தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தக் காரையும் கொள்ளையனயும் அமெரிக்க போலீசார் நாடு முழுவதும் தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையன் குறித்து துப்பு கொடுக்கும் நபர்களுக்கு 5 ஆயிரம் டாலர்கள் சன்மானம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.