வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையானது பாமக மற்றும் அதிமுக குழுவோடு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று முதல்வரை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது இன்று மாலை 4 மணியளவில் முதல்வர் இல்லத்தில் நடைபெறுகின்றது. இதில் பாமக நிறுவனர் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளார்.
குறிப்பாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் அதிமுக கூட்டணியில் தொடர முடியும் என்று ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் பேசி இந்த நிலையில் தற்போது ஏற்கனவே இரண்டு நாட்களாக தொடர்ந்து பாமக – அதிமுக மூத்த அமைச்சர்களும் பேச்சுவாரத்தை நடத்தி வந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் முதல்வரை சந்திக்க இருக்கின்றார்.
இந்த சந்திப்புக்கு பின் அதிமுக கூட்டணியில் பாமக தொடருமா என்ற ஒரு கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், இன்று மாலை தெரிவிப்பதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்தையில் உடன்பாடு கிடைத்துள்ளதாகவும், பாஜக தலைவர் ராமதாஸ் தங்கள் மக்களின் உரிமையை நாட்டியுள்ளார் எனவும் அக்கட்சியினர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.