சட்டமன்ற தேர்தலின் ஸ்டாலின் வெற்றி பெற வேண்டி துர்கா ஸ்டாலின் நாங்குநேரியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நாங்குநேரி வானுமலை பெருமாள் கோயிலில் வானுமாலை ராமஜர் ஜீயரிடம் ஆசி பெற்று சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சாமி தரிசனமும் செய்துள்ளார். அப்போது அவருடைய உறவினர்களும் உடன் இருந்துள்ளனர்.