சசிகலா தங்கியிருக்கும் விடுதியின் வாசற்கதவை தொட்டு அவருடைய ஆதரவாளர்கள் வணங்கி செல்லும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து அவருக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பூரண குணமடைந்த பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார். இதையடுத்து அவருடைய ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவில் சசிகலா தங்கியிருக்கும் விடுதியில் வாசற்கதவை தொட்டு அவருடைய ஆதரவாளர்கள் வணங்கி செல்லும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. மேலும் அவர்கள் சசிகலா தமிழகம் தமிழகம் திரும்பும் போது அதிமுக கொடியுடன் வரவேற்போம் என்றும், அவர் தமிழகம் திரும்பிய உடன் அதிமுக அவரிடம் சென்றடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.