Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரீமாசென் கணவரா இவர் ?… இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்…!!!

நடிகை ரீமா சென்னின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நடிகை ரீமா சென் ‘மின்னலே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இவர்  ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து விஜய் , விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்திருந்தார் . இதன் பின் ஒரு சில காலங்கள் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை . இதையடுத்து நடிகை ரீமா சென் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் .

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ . இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாததால் நடிகை ரீமா சென்  சினிமாவை விட்டு விலகினார் . இந்நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் ரீமா சென் சுற்றுலா சென்ற புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கணவர் மற்றும் மகனுடன் ரீமா சென் வெளியிட்டுள்ள இந்த அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |