பிப்ரவரி -10 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஜனவரி மாதம் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு நல்ல மழை பெய்தது. இதையடுத்து படிப்படியாக மழையின் அளவு குறைந்து சாதாரண நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் ஓரிரு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன், காலையில் பனி மூட்டத்துடனும் காணப்படும். மேலும் மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.