தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதற்கு மத்தியில் கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது விவசாயிகளை தடுக்க முயன்ற போலீசார் நடத்திய தடியடி தாக்குதலை விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அதாவது மற்ற வாகனங்களை ஓட்ட செய்யாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது. தமிழகத்தில் இந்த போராட்டத்தில் பங்கேற்க விவசாய சங்கங்கள்களமிறங்கியுள்ளன. அதனால் தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை சமாளிக்க தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் திருச்சி, தஞ்சை மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.