ஹரிஷ் கல்யாண்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது .
தெலுங்கு திரையுலகில் கடந்த 2016 – ல் விஜய் தேவர்கொண்டா , ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பெல்லி சூப்புளு . இயக்குனர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதையடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை 2016-ல் கைப்பற்றி அவரே தயாரித்து வெளியிட திட்டமிட்டிருந்தார் . ‘பொன் ஒன்று கண்டேன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் விஷ்ணு விஷால் , தமன்னா ஆகியோர் நடிக்க இருந்தனர் . பின்னர் சில காரணங்களால் கைவிடப்பட்ட இந்த படத்தின் ரீமேக் உரிமை கைமாற்றப்பட்டது .
Meet Karthik❤️Shruti – An epic (mis)match! 👨🍳👩💻
Here's the motion poster of #OhManapenne 🎶
▶️ https://t.co/DAadvGtfEC@iamharishkalyan @KaarthikkSundar @idhavish @thespcinemas @madhavmedia @ThirdEye_Films @krishnanvasant @Composer_Vishal @thinkmusicindia pic.twitter.com/YjEkUJJpLB
— Priya BhavaniShankar (@priya_Bshankar) February 5, 2021
தற்போது இந்தப் படம் புதிய குழுவோடு தொடங்கி வெற்றிகரமாக படப்பிடிப்பை நிறைவு செய்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது . அறிமுக இயக்குனர் கார்த்திக் சந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யான் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர் . ‘ஓ மணப்பெண்ணே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது . இந்நிலையில் இந்த படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது .